கோதுமை மாவின் விலை பத்து ரூபாவால் மாற்றம்!

#SriLanka #prices #Food
Mayoorikka
2 years ago
கோதுமை மாவின் விலை பத்து ரூபாவால் மாற்றம்!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அந்த நிறுவனத்தின் கோதுமை மாவை விநியோகிக்கும் அனைத்து விற்பனை முகவர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

 இதன்படி, வெதுப்பக உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பிரிமா கோதுமை மா ஒரு கிலோவை 210 ரூபாவிற்கு விநியோகஸ்தர்களுக்கு வழங்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

 இதற்கு முன்னர் சந்தையில் 230 ரூபா சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

 புதிய விலையின்படி, நிறுவனம் ஒரு கிலோ பச்சை கோதுமை மாவை மொத்த விலையில் 195 ரூபாய்க்கு விற்கிறது, அதே நேரத்தில் கோதுமை மா ஒரு கிலோ சில்லறை விலையில் 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!