மீண்டும் தலைகீழாக கவிழ்ந்து பஸ் விபத்து

#SriLanka #Death #Arrest #Police #Accident #Bus #Lanka4
Kanimoli
2 years ago
மீண்டும் தலைகீழாக கவிழ்ந்து பஸ் விபத்து

உமா ஓயா திட்ட அலுவலகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எல்ல – வெல்லவாய வீதியில் இன்று (18) காலை கரதகொல்ல உமா ஓயா திட்ட அலுவலகத்திற்கு வெகு தொலைவில் உள்ள இடத்தில் குன்றின் மீது கவிழ்ந்தது. விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பயணிகள் காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இன்று காலை 7.15 மணியளவில் பேரூந்து பயணிக்க ஆரம்பித்ததாகவும், அதிவேகமாக சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாகவும் அங்கு பயணித்த இளைஞர் ஒருவர் தெரிவித்திருந்தார். விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த இளைஞர் விபத்து குறித்து விவரிக்கையில்; “நானும் பேருந்தில் தான் வந்தேன், மாமா பேருந்தினை செலுத்து வருகையில் பேருந்து திடீரென பிரேக் இழந்தது, எங்களைக் காப்பாற்ற மாமா எவ்வளவோ முயன்றார்.

 எல்லாரும் ஜியரை மாற்றச் சொன்னோம். அவர் வந்த வேகத்திற்கு அது முடியாமல் போனது. மாமா திடீரென மலையின் பக்கத்தை தொட்டு மறுபக்கம் திருப்பியதும் பேரூந்து கவிழ்ந்தது. பேரூந்தில் சுமார் 10 பேர் இருந்தோம். நானும் ஒருவரும் மட்டுமே உயிருடன் இருந்தோம். உதவி கோரி வேறொரு வாகனத்தில் ஏற்றி எம்மை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தான் மாமா இறந்து விட்டார் என்பது எமக்கு தெரியவந்தது..”எனவும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!