கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானம்
#SriLanka
#Keheliya Rambukwella
#Lanka4
#Health Department
Kanimoli
2 years ago
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக இன்று (17) ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை சுகாதார அமைச்சருக்கு எதிராக மாத்திரமல்ல, ராஜபக்ஷ விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரானது எனவும் இதற்கு முழு அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.