நாடு திவாலானது குறித்து ஆராயும் குழு இன்று கூடுகிறது!
நாட்டின் பொருளாதாரம் திவால்நிலையை அடைந்தமைக்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு இன்று (18.07) முதன் முறையாக கூடவுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்த தரப்பினர் அழைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குழுவிற்கு பல எதிர்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக நாடு திவாலானதற்கு முக்கிய காரணமாக பொதுஜன பெரமுன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த கட்சிய சேர்ந்த ஒருவர் தலைமையில், பொருளாதாரத்தை ஆராயக்கூடிய அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த குழுவின் தலைவராக சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.