வந்தே பாரத் ரெயிலில் தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுமில்லை

#India #world_news #Train #Tamilnews
Mani
2 years ago
வந்தே பாரத் ரெயிலில் தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுமில்லை

மத்திய பிரதேசத்திற்கும் புதுடெல்லி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அந்த குறிப்பிட்ட பெட்டியில் இருந்த சுமார் 22 பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வந்தே பாரத் ரெயில் வழக்கமாக மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு புதுடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை மதியம் 1.10 மணியளவில் சென்றடையும்.

இன்று காலை, ரயில் பெட்டி ஒன்றில் ரயில் சக்கரத்தில் அருகிலிருந்து புகை வெளியேறியதைக் கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரெயில் பெட்டியின் பேட்டரி பாக்ஸ் அருகே உருவான தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4