2030க்குள் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம் - ஐ.நா

#UN #Disease #Aid
Prasu
2 years ago
2030க்குள் உலகம் முழுவதும்  எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம் - ஐ.நா

2030 ஆம் ஆண்டளவில் உலகம் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம். அல்லது புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை குறைக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதன் உச்சத்திலிருந்து 59% குறைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்ததுள்ளதாகவும், தடுப்பு மற்றும் சிகிச்சையில் கணிசமான முதலீடு செய்வதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030க்குள் எச்.ஐ.வி தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், உண்மையில் சில நாடுகள் அந்த வழியில் பயணிப்பதாகவும் ஐ.நாவின் நிர்வாக இயக்குனர் வின்னி பியானிமா தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2010 இல் 7.7 மில்லியனில் இருந்து 2022 இல் 29.8 மில்லியனாக கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கையானது 1996 -2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கணிசமாக குறைந்தது.

 ஆகவே வரும் 2030 இல் எச்.ஐ.வி தொற்றை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!