பல மாதங்களுக்கு பின் உயிரிழந்த பிரபல பாடகியின் மரணம் குறித்து வெளிவந்த தகவல்

#Cinema #Death #America #Medical #report
Prasu
2 years ago
பல மாதங்களுக்கு பின் உயிரிழந்த பிரபல பாடகியின் மரணம் குறித்து வெளிவந்த தகவல்

அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி ஆறு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவர் மரணத்திற்கான உண்மை காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.

இயற்கையாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதன்படி, பல ஆண்டுகளுக்கு முன் அவர் பேரியாட்ரிக் (bariatric) என்றழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது சிறுகுடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து அங்கு புதிதாக வளர்ந்த திசுக்களால் சிறுகுடலில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வழிவகுத்தது தற்போது வெளியாகி உள்ள மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

 இறப்பதற்கு முன்னர் தொடர்ச்சியாக வயிற்று வலி, காய்ச்சல், வாந்தியால் பாதிக்கபப்ட்டிருந்த லிசா அதற்கான மருத்துவ சிகிச்சைகள் எதையும் பெறவில்லை எனவும் தெரிவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!