நெடுந்தீவு மக்களின் பிரச்சனைகளுக்கு சாதகமான பல தீர்வு! விரைந்தார் டக்ளஸ்

#SriLanka #Douglas Devananda
Mayoorikka
2 years ago
நெடுந்தீவு மக்களின் பிரச்சனைகளுக்கு சாதகமான பல  தீர்வு! விரைந்தார்  டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

 நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெறும் கூட்டம் மூலம் சாதகமான பல தீர்வுகளைத் தரும் என்று தெரியவருகின்றது.

 அமைச்சருடன் மாவட்டத்தின் தொடர்புபட்ட அதிகாரிகளும் நெடுந்தீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர். 

  ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெடுந்தீவு மண்ணில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

(இரண்டாம் இணைப்பு)

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14-07-2023) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

 நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பிரதேசத்தின் கடல் போக்குவரத்து சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

 மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசணம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி புனரமைப்பு காணிஉள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதில் , நாடாளுமன்ற உறுப்பினர் சிலஞானம் ஸ்ரீதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

images/content-image/1689317033.jpg

images/content-image/2023/07/1689317017.jpg

images/content-image/2023/07/1689316984.jpg

images/content-image/2023/07/1689316956.jpg

images/content-image/2023/07/1689313024.jpg

images/content-image/2023/07/1689313001.jpg

images/content-image/2023/07/1689312946.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!