ராஜபக்சவினரின் ஆட்சி மாறியும் நெருக்கடிகள் தொடர்கின்றன: கடுமையாக சாடிய மனிதவுரிமைகள் கண்காணிப்பகம்
ராஜபக்ச ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு ஒருவருடத்தின் பின்னரும் இலங்கையில் பொருளாதார அரசியல் மற்றும் மனிதவுரிமைகள் நெருக்கடிகள் தொடர்வதாக மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நாடுமுகம் கொடுத்திருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டுமெனில் மனிதவுரியைகளை வலுப்படுத்துவது அவசியம் என்பதனை ஜனாதிபதி ரணில் விகாரமசிங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
2022 ஜூலை 13ம்திகதி பலவாரகால ஆர்ப்பாட்டங்கள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டிலிருந்து தப்பியோடச்செய்ததன் பின்னர் கொழும்பின் பல வீதிகளில் கொண்டாட்டங்கள் வெடித்தன.
பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை யுத்தகுற்றச்சாட்டுகளுக்குள்ளான கோட்டாபய பரந்துபட்ட ஊழல் மற்றும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளிற்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பொருளாதாரநெருக்கடிக்கு தலைமை தாங்கினார்.
ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் சிலமேலோட்டமான மாற்றங்களை தவிர இலங்கையின் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்படவில்லை, இது பலரின் மனித உரிமைகள் மீதுதாக்கத்தை - பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பொருளாதாரநெருக்கடியின் போது கண்ணிற்கு அதிகம் புலப்படும் விடயமாக காணப்பட்ட எரிபொருள்தட்டுப்பாடு தற்போது பெருமளவிற்கு இல்லாமல் போயுள்ளது.
ஆனால் இன்னமும் 6 மில்லியன் மக்கள் - அதாவது 30வீதமானவர்கள் இன்னமும் உணவுப்பாதுகாப்பின்மையின் பிடியில் சிக்குண்டுள்ளனர்.அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது. ஐந்துவயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 75 வீதமானவர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றனர்.
இதேவேளை புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைக்காக பொலிஸாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தியுள்ளார்.
முன்னைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைத்திருந்தஅதேவேளை ரணில் விக்கிரமசிங்க அந்த சட்டத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணதலைவர்களை கைதுசெய்வதற்கு பயன்படுத்தினார்.
புதிய அரசாங்கம் முன்மொழிந்த திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் ஜனாதிபதி பொலிஸ் இராணுவத்திற்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கியிருக்கும் மேலும் அது பேச்சுக்கள் குறித்த புதிய குற்றங்களையும் உருவாக்கியிருக்கும்.
கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அரசாங்கம் அந்த சட்டத்தை இடைநிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.எனினும் அதிகாரிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு வே சட்டங்களை பயன்படுத்துகின்றனர்.
இலங்கை அரசாங்கம் வடக்குகிழக்கில் நில ஆக்கிரமிப்பு பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆலயங்கள் உட்பட தமிழ் முஸ்லீம்களின் நிலங்களை இலக்குவைப்பது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான துஸ்பிரயோகங்களில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது.
1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைகூற முயலும் தமிழர்கள் அச்சுறுத்தல்களையும் தடை உத்தரவுகளையும் எதிர்கொள்கின்றனர்.
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்காக பரப்புரை செய்யும் காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விடஅதிகளவில் வடக்குகிழக்கு மக்கள் கருத்துவெளிப்பாட்டு - ஒன்றுகூடல் தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இலங்கை தொடர்ந்தும் பொருளாதார அரசியல் மனித உரிமை நெருக்கடியில் காணப்படுகின்றது,இலங்கையின் பிரச்சினைகளுக்குதீர்வை காண்பதற்கு பாரிய குற்றச்செயல்களிற்கு பொறுப்புக்கூறுதலும்,உரிமைகளை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணரவேண்டும் என தெரிவித்துள்ளது.