இலங்கையில் முதலீடு செய்ய இடங்களைத் தேடும் சீனாவின் பெரும் பணக்காரர்கள் குழு

#SriLanka #China #Dinesh Gunawardena
Prathees
2 years ago
இலங்கையில் முதலீடு செய்ய இடங்களைத் தேடும் சீனாவின் பெரும் பணக்காரர்கள் குழு

பல்வேறு துறைகளில் சாத்தியமான முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சீன தொழில்முனைவோர்களின் பெரும் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்தது.

 சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில், ரத்தினங்கள் மற்றும் நகைகள், விவசாயம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்குத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.

 Daguowen Culture Co Limited இன் தலைவர் Zhang Qihua, சர்வதேச கலாசார பரிமாற்றம் மற்றும் உலகளாவிய நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதோடு, சீனாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை கூட்டாக ஊக்குவிப்பதற்காக Connaissance De Ceylon இன் தலைவர் சந்திரா விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அவர் கூறினார்.

 Zhejiang பிரபல பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி திருமதி Jin Mei Yang, இலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டங்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!