காதலர்களால் கடுமையான துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட மூன்று மாணவிகள்

#SriLanka #Arrest #Sexual Abuse
Prathees
2 years ago
காதலர்களால் கடுமையான துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட மூன்று மாணவிகள்

டந்த 12ஆம் திகதி மொனராகலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று ஆண் நண்பர்களுடன் மொனராகலை ஹுலந்தாவ தெற்கு பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.

 அங்கு, மூன்று மாணவிகளில் இருவர்,அவர்களது காதலர்களால் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதோடுஇ மற்றைய மாணவியும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 குறித்த சிறுமிகள் மூவரும் அன்றைய தினம் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பாடசாலைக்கு வராத நிலையில், மூன்று இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஹுலந்தாவ தெற்கு பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 அன்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் மூன்று சிறுமிகளும் வீட்டிற்கு வந்து,பெற்றோர்  விசாரித்தபோது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

 மூன்று பெண்களும் பதினைந்து வயது எனவும் மூன்று காதலர்களுக்கும் பதினேழு வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 சம்பவத்தை அறிந்த ஒரு சிறுமியின் தந்தை மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மூன்று சிறுமிகள் மற்றும் மூன்று காதலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 மூன்று சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காதலர்கள் மூவரையும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!