தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் - பிரித்தானிய எச்சரிக்கை

#Tourist #Pakistan #Warning #Britain #Visit
Prasu
2 years ago
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் - பிரித்தானிய எச்சரிக்கை

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதல்களில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க பல வாய்ப்புகள் உள்ளன. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட, பயங்கரவாத அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் மற்றும் கலவரங்கள் அதிக ஆபத்து இருப்பதாக, வெளியுறவு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள் நேரடியாக குறிவைக்கப்படலாம். பாகிஸ்தானில் எங்கும் கூட்டம், பொதுக்கூட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பௌஜர், முகமந்த், கைபர், ஒராக்சாய், குர்ரம், வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் தெற்கு வசிரிஸ்தான் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று FCDO அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த மாகாணத்தின் ஒன்பது மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாகிஸ்தானில் மேற்கத்திய எதிர்ப்பு உணர்வுகளுடன் நடத்தப்படும் அரசியல் பேரணிகள் வன்முறையாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!