கீவ் மீதான ரஷ்ய டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

#Death #Attack #War #Drone #Russia Ukraine
Prasu
2 years ago
கீவ் மீதான ரஷ்ய டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகரான கீவ் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்திருப்பதாக உக்ரைனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு வேளைகளில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை கீவ் பிரதேசத்திலுள்ள சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. போடில்ஸ்கி மாவட்டத்தில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே உடல் கருகிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கீழே விழுந்த ரஷ்ய ட்ரோன்களின் பொருட்கள் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை சேதப்படுத்தியதுடன், ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்திலுள்ள குடியிருப்பு ஒன்றின் மாடியில் தீ ஏற்பட காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவால் ஏவப்பட்ட 15 ட்ரோன்களில் 11 ஐ உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருந்தது.

 மேலும் , நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற சென்றிருக்கும் வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!