பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்த சர்வதேச நாணய நிதியம்

#Pakistan #Dollar #IMF
Prasu
2 years ago
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்த சர்வதேச நாணய நிதியம்

பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி- சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது 13 ஜூலை 2023 1:17 PM முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. 

நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும். மேலும் படிக்க பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!