புதிய நிறுவனத்தை ஆரம்பித்த எலான் மஸ்க்

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்
'ஏஐ' குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது "பேயை வரவழைப்பது போன்றது" என்றும் கூறியிருந்தார்.



