கனமழை காரணமாக வட மாநிலங்களில் ரெயில் சேவை கடும் பாதிப்பு!

#India #Delhi #people #Rain #Train #HeavyRain #Mumbai
Mani
2 years ago
கனமழை காரணமாக வட மாநிலங்களில் ரெயில் சேவை கடும் பாதிப்பு!

இந்தியாவின் வட மாநிலங்களான காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜூலை 7 முதல் 15 வரை சுமார் 300 சரக்கு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 406 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 500 பயணிகள் ரயில்களுடன், 600 சரக்கு மற்றும் விரைவு ரயில்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4