கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு!
#SriLanka
#Colombo
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (15.07) நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11,12,13,14,15 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.