21 வயது யுவதியின் மரணம் குறித்து வைத்தியசாலை தரப்பு விளக்கம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
21 வயது யுவதியின் மரணம் குறித்து வைத்தியசாலை தரப்பு விளக்கம்!

வயிற்று வலி காரணமாக பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது யுவதியான  சாமோதி சந்தீபனி மதுசிகா என்பவர் நேற்று (12.07) உயிரிழந்தார். 

இதனையடுத்து வைத்தியசாலையின் தாதி ஒருவர் இரு ஊசிகளை செலுத்தியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக  மதுசிகாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து  இலங்கை தாதியர் சங்கம் இன்று ஊடகவியலாளர்  சந்திப்பொன்றை நடத்தி  விளக்கமளித்துள்ளது. 

இதன்போது குறித்த யுவதிக்கு 10 மில்லி சிரிஞ்ச்கள் மருந்தை வழங்க வேண்டும் எனவும், அந்த சமயத்தில் குறித்த மருந்து கையிருப்பில் இல்லை எனவும் தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்தை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செவிலியிர், 5சிசி சிரிஞ்ச்களில் கரைத்து இந்தமருந்தை கொடுத்துள்ளார்.  இதனால் ஏற்பட்ட சிக்கலால் குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் அண்மைக்காலமாக இலங்கையின் மருத்துவத்துறை தொடர்ச்சியாக பாரிய சவால்களை சந்தித்து வருகின்றது. குறிப்பாக நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், போலி மருந்துகள் புலக்கத்தில் உள்ளன. அது மாத்திரம் இல்லாமல் போலி மருந்துகளை கண்டுப்பிடிக்கும் கருவிகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருவது மேலும் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!