சமூக நலனுக்கு சட்டம் மட்டும் போதாது: குவிந்து கிடக்கும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

#SriLanka #Lanka4 #srilankan politics #wijayadasa rajapaksha
Kanimoli
2 years ago
சமூக நலனுக்கு சட்டம் மட்டும் போதாது: குவிந்து கிடக்கும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான சுமார் 24,700 வழக்குகள் இருப்பதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

 “.. இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள 29,700 வழக்குகளில், 9,800 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உயர் நீதிமன்றங்களில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள். 

இந்த நிலைக்கு நாம் வருந்த வேண்டும். சட்டத்தால் மட்டும் சமூகத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. சமூக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!