மெக்சிகோவில் குண்டுவெடிப்பு : 06 பேர் உயிரிழப்பு!
#world_news
#Mexico
#Lanka4
Thamilini
2 years ago
மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில், 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பொலிஸ் அதிகாரிகளும், இரண்டு பொதுமக்களும் அடங்கவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் 9, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பொதுமக்கள் என்றும் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவில் போதைப் பொருள் விற்பனையாளர்களால் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் அபாயத்தின் அளவை சுட்டிக்காட்டுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.