ஜூன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக வனிந்து ஹசரங்க தேர்வு
#Srilanka Cricket
#Player
#Award
Prasu
2 years ago

ஜூன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியமையை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் Travis Head மற்றும் Zimbabwe ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Sean Williams ஆகியோர் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த மாத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வனிந்து ஹசரங்க 22 விக்கெட்களையும் 91 ஒட்டங்களையும் பெற்றிருந்தார்.



