'சந்திரயான் 3' ஏவுகணை சோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல்

#India #world_news #Tamilnews #Rocket #Space
Mani
2 years ago
'சந்திரயான் 3' ஏவுகணை சோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல்

பூமியில் இருந்து 384 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டம் ரூ.615 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் வைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இந்த நிலையில் ‘சந்திராயன் 3’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4