பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்!

#India #Death #Accident #Bus #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொடிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காகிநாடா பகுதி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்றவர்களை ஏற்றி கொண்டு அந்த பஸ் சென்று உள்ளது.

அந்த பஸ்சில் 35 முதல் 40 நபர்கள் பயணிக்கின்றனர். தர்சி நகர் அருகே சென்றபோது, பஸ் கால்வாயில் கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தால் பேருந்தில் இருந்தவர்கள் அலறினர்.

அப்துல் அஜீஸ், அப்துல் ஹனி, ஷேக் ரமீஸ், முல்லா நூர்ஜஹான், முல்லா ஜானி பேகம், ஷேக் சபீனா மற்றும் ஷேக் ஹீனா ஆகிய 6 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அவர்கள் அனைவரும் பொடிலி கிராம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் அசதியால் தூங்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4