இத்தாலியில் இலங்கையர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையர்கள் இருவர் இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 60 வயதான தந்தையும் 25 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இத்தாலியில் தமது உறவினர்களுடன் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்க்ச் சென்றுள்ளனர் இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
வென்னப்புவ பொலவத்தை பிரதேசத்தை சேர்ந்த துலாத் மற்றும் அவரது தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.