மன்னம்பிட்டிய பாலத்தில் விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Accident #Bus
Prathees
2 years ago
மன்னம்பிட்டிய பாலத்தில் விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் வெளியான தகவல்

நேற்றிரவு பொலன்னறுவை மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று மோதி ஓடையில் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மேலும், 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்துக்கு தமது சபையின் அனுமதிப்பத்திரம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், பஸ் சாரதியின் அதிவேகமும் கவனக்குறைவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண்ணும் 9 ஆண்களும் பதினொன்றரை வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். 

 இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் பயின்ற இரண்டு மாணவர்களும் அடங்குவர். அவர்களில் ஒருவரான 23 வயதான சமிதா டில்ஷான் தும்மலசூரிய பிரதேசத்தில் வசித்து வந்தார். 

 அவரது நண்பரான ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தமித் சாகர அத்தபத்து என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். 

 இவர்கள் இருவரும் தமது வீடுகளை விட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தின் போது பேருந்தில் 50 அல்லது 60 பயணிகள் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது,

  அதன்படி, கொட்டாலிய ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை மன்னம்பிட்டியவில் 11 பயணிகளை பலிகொண்ட பஸ்ஸின் சாரதி, இதற்கு முன்னரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 குறித்த சாரதி குடிபோதையில் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், ஆபத்தான மருந்துகளை உட்கொண்டாரா என்பதை அறிய நச்சுயியல் அறிக்கையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த சாரதி அந்தப் பாதையில் தொடர்ந்தும் பயணித்து வரும் நிலையில், குறித்த பாலம் தொடர்பில் அவர் நன்றாக அறிந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!