கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை சென்ற 20 தமிழர்கள் முகாமில் தங்கி உள்ளனர்

#India #Tamilnews #Breakingnews #Mountain
Mani
2 years ago
கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை சென்ற 20 தமிழர்கள் முகாமில் தங்கி உள்ளனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் இயற்கையாக உருவான பனி லிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம்.

அதேபோல் இப்போதும் யாத்திரை தொடங்கிய நிலையில் அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச் சரிவு, வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

கடந்த 2ம் தேதி, தமிழகத்தில் இருந்து 20 பேர் கொண்ட குழு அமர்நாத் யாத்திரையை துவக்கி, தொடர்ந்து 8ம் தேதி பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

அதன்பிறகு மலையில் இருந்து இறங்கும் சமயத்தில் பலத்த மழை பெய்ததால் அவர்களால் உடனடியாக வரமுடியவில்லை. கடுமையான நிலச்சரிவின் விளைவாக, ஸ்ரீநகரில் உள்ள 'பால்டால்' என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு முகாமில் தங்குவதற்கு ராணுவ வீரர்கள் உதவினார்கள்.

சென்னையை சேர்ந்த ரம்யா உள்பட 20 பேர் அங்கிருந்து தமிழகத்துக்கு வருவதற்கு உதவி கேட்ட நிலையில் ராணுவ வீரர்கள் அந்த சாலையை அதற்குள் சரிப்படுத்தி கொடுத்துவிட்டனர்.

நாளை 2 பெண்கள் உள்பட மொத்தம் 11 பேர் இரயில் மூலம் ஈரோடு வருகிறார்கள். மீதமுள்ள 9 பேர் விமானம் மூலம் சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4