மழையுடனான வானிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மழையுடனான வானிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் இன்றைய (ஜுலை 08) வானிலை குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தியுள்ளதுடன், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் மத்திய  மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது காற்று, மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4