கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பதிவாகிய சிசு மரணங்கள் குறித்து ஆய்வு!

#SriLanka #Hospital #Lanka4
Thamilini
2 years ago
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பதிவாகிய சிசு மரணங்கள் குறித்து ஆய்வு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வாரம் இரு சிசு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

குறித்த மரணங்களுக்கான காரணம் தெரியவராத நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சத்தியமூர்த்தி, அதற்காக மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் சுகாதாரத்துறை அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கி வருகிறது. சத்திர சிகிச்சைகளுக்கு முன் வழங்கப்படும் மயக்க மருந்துகள் காரணமாக அதிகளவானோர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!