உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பற்றிய செய்தியை எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
பாரத் ஜெயின் என்பவரே பிச்சை எடுத்து அதிகளவு வருமானம் ஈட்டும் நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய மாத வருமானம் 60 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய்வரையில் இருக்கலாம் என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம் (சிஎஸ்எம்டி) மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட மும்பையின் முக்கிய இடங்களில் அவர் இடைவிடாமல் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மும்பையின் பரேல் பகுதியில் அமைந்துள்ள 1BHK டூப்ளக்ஸ் குடியிருப்பில் வசிக்கும் இவருக்கு மும்பையில் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட்டையும், தானேயில் இரண்டு கடைகளையும் வைத்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு மாத வாடகையாக 30 ஆயிரம் ரூபாயிற்கும் மேல் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.



