இலங்கைக்கு 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி!

#India #SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இலங்கைக்கு   220 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி!

இலங்கையில் அபிவிருத்தி பணிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி  220 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கையில் டிரான்ஸ்மிஷன் மற்றும் கிரிட் மேம்பாட்டிற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திட்ட மேம்பாட்டுக்காக முதலீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டமான 130 MW சம்பூர் கிரவுண்ட் மவுண்ட் சோலார் பவர் பார்க் அபிவிருத்தி திட்டம் குறித்த சந்திப்பின்போது இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்திற்கான எரிசக்தி அனுமதி அடுத்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!