அமெரிக்காவில் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான விஷேட அறிவிப்பு

#America #Visa
Prasu
2 years ago
அமெரிக்காவில் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான விஷேட அறிவிப்பு

வல்லரசு நாடான அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது இன்றளவும் பலரது கனவாக உள்ளது. 

அதற்கு கிரீன் கார்டு என்று சொல்லப்படுகிற நிரந்தர விசா அவசியமானது. அதனை பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். 

எனினும் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்தநிலையில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதத்தை குறைக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை வருகிறது. 

அதன் ஒருபகுதியாக 1992 முதல் 2022-ம் ஆண்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார். 

 இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கிரீன் கார்டுகள் திரும்ப பெறப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நிறைவேறும் பட்சத்தில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதம் குறைந்து அதனை பெற காத்திருப்பவர்களுக்கு நிவாரணமாக அமையும் என அஜய் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!