கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் கடந்த ஆண்டு 22 லட்சம் பேர் பாதிப்பு

#Death #Rain #Flood #SouthAfrica
Prasu
2 years ago
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் கடந்த ஆண்டு 22 லட்சம் பேர் பாதிப்பு

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தொடர்ச்சியான வெள்ளம், நில ச்சரிவுகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஓராண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காரணங்களால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் அங்கு சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் குறைபாடு நிலவுகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

இந்த ஆண்டுக்கான மழைக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்பதால் இடம்பெயர்தல் மேலும் அதிகரிக்கலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!