வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு

#America #drugs #Biden #Trump
Prasu
2 years ago
வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. 

தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு வந்து கண்டெடுத்த பொருள் குறித்து சோதனை நடத்தினர். இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், "இவை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து டிரம்ப், தனது "டிரூத் சோஷியல்" சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிபரின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ என எவ்வாறு நம்புவது? ஆனால், போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க, 'கிடைத்தது மிக குறைந்த அளவு' என்றோ அல்லது 'அது கோகைன் அல்ல, ஆஸ்பிரின்' என்றோ கூறத் தொடங்கி விடும். என்னை வெறுக்கும் அரசு வக்கீல் ஜாக் ஸ்மித், கோகைன் கண்டெடுத்த பகுதியில் காணப்பட்டாரா?" என பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4