தலதா மாளிகைக்கு மேல் ஆளில்லா விமானத்தை அனுப்பிய வெளிநாட்டவர் கைது
#SriLanka
#kandy
Prathees
2 years ago
தலதா மாளிகை மீது ஆளில்லா விமானத்தை அனுப்பிய வெளிநாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
25 வயதான அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தின் மீது இன்று காலை குறித்த நபர் ஆளில்லா விமானத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன், குறித்த ஆளில்லா விமானத்தில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.