மெட்டாவின் திரட்ஸ் குறித்து எலான் மஸ்க்கின் கருத்து

#world_news #Lanka4 #ElonMusk #லங்கா4 #App
மெட்டாவின் திரட்ஸ் குறித்து எலான் மஸ்க்கின் கருத்து

டுவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக திரட்ஸ்செயலியை மெட்டா நிறுவனம் ஆரம்பித்துள்ள வேளையில் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் கருத்து வெளியிட்டுள்ளார்.

மெட்டாவின் திரட்ஸ். நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்ட செயலியில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வருகின்றனர்.

 இந்த நிலையில், திரெட்ஸ் குறித்து டுவிட்டர் அதிபர் எலான் மஸ்க் ‘’போட்டி இருக்கலாம் ஆனால் ஏமாற்றக்கூடாது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து டுடிவிட்டர் நிறுவனன் வழக்குரைஞர் அலெக்ஸ் ஸ்பிரோ மெட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘’மெட்டாவின் ‘திரெட்’ செயலியை உருவாக்க டுவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு டுவிட்டர் வர்த்தகம் மற்றும் பிற ரகசியங்கள் பற்றி தெரியும்.

எனவே டுவிட்டர் நிறுவனம் அறிவுசார் சொத்துரிமைகளை செயல்படுத்த விரும்புகிறது. டுவிட்டரின் வர்த்தக மற்றும் பிற தகவல்களைப் பயன்படுத்துவதை மெட்டா நிறுவனம் நிறுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!