ஒடிசா ரெயில் விபத்து; பொறியாளர் உள்பட 3 பேர் கைது

#India #Arrest #Accident #Crime #Train #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஒடிசா ரெயில் விபத்து; பொறியாளர் உள்பட 3 பேர் கைது

புவனேஸ்வரம்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் இன்று இரண்டு பொறியாளர்கள் உள்பட 3 பேர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி இரவில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 291 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இன்று மூத்த என்ஜினியர் அருண்குமார் மெஷந்தா, என்ஜினியர் முகம்மது அமீர்கான்,மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் பப்புக்குமார் உள்பட மூவர் மீது சி.ஆர்.சி.பி. பிரிவு 304 மற்றும் 201 ன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4