இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவிலும், பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவு
#India
#people
#Earthquake
#Indonesia
#Pakistan
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜகார்த்தா நேரப்படி நள்ளிரவு 12:13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1:48 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கே 207 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, மேலும் இந்த நிலநடுக்கம் 131 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



