பணிப்புறக்கணிப்பால் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிப்பு
#Hospital
#children
#strike
#doctor
Prasu
2 years ago
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எட்டாம் விடுதியில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு பெண் வைத்தியர் உள்ளிட்ட மூன்று வைத்தியர்கள் கடந்த பத்து நாட்களாக தமது கடமையை புறக்கணித்ததன் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இத்துடன், குறித்த விடுதிக்கு குழந்தைகளை அனுமதித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.