சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்த வெளியான விசேட அறிவிப்பு
#SriLanka
#Ministry of Education
#Examination
Prasu
2 years ago
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் எனவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.