கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: முல்லைத்தீவில் வெடிக்கவுள்ள போராட்டம்
#SriLanka
#Protest
#Mullaitivu
Mayoorikka
2 years ago
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக" எனும் தொனிப் பொருளில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தினை முல்லைத்த்தீவுமாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
எனவே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் வருமாறு முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.