தாய்லாந்தினால் மற்றுமொரு யானைக்கு மருத்துவ உதவி!

#SriLanka #Elephant
Mayoorikka
2 years ago
தாய்லாந்தினால் மற்றுமொரு யானைக்கு மருத்துவ உதவி!

தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீளப்பெற்ற நிலையில் , இலங்கையில் மற்றொரு யானைக்கு மருத்துவ உதவியை வழங்க தாய்லாந்து முன்வந்துள்ளது.

 இரண்டாவது யானையும் தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட நிலையில், அதன் உடல்நிலை குறித்தும் கவலை எழுப்பப்பட்டுள்ளது.

 தற்போது கண்டியில் உள்ள பிரது பா என்ற யானையை அதன் வயது காரணமாக தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முடியாது என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 இதன் விளைவாக, தாய்லாந்து மருத்துவக் குழுவொன்று சில வாரங்களில் இலங்கைக்கு சென்று மருத்துவப் பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை நிபுணர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து விமானம் மூலம் 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த 30 வயதுடைய சாக் சுரின் யானை, அழைத்து செல்லப்பட்டது.

 தாய்லாந்தின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், நாடு திரும்பிய யானையின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

 சாக் சுரின் தற்போது ஒரு மையத்தில் 30 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!