நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு தனுஷ்க குணதிலக்க கோரிக்கை
#SriLanka
#Police
#Srilanka Cricket
#Lanka4
#Cricket
Kanimoli
2 years ago
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில், இந்த வழக்கை நீதிபதி முன்னிலையில் மட்டுமே விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கும் வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது, நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.