பிரதம நீதியரசர் தாக்கல் செய்த வழக்குகள் பொய்யாக இருக்க முடியாது! லக்ஷ்மன் கிரியெல்ல
சட்டமா அதிபரின் காலத்தில் தற்போதைய பிரதம நீதியரசர் தாக்கல் செய்த 35வழக்குகள் பொய்யாக இருக்க முடியாது' என சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நமது நாட்டின் வளர்ச்சிக்கு சட்டத் துறை, காவல்துறை, மிகவும் முக்கியமானவை.
நான் பாராளுமன்றத்திற்கு வந்த நாள் முதல் சொல்லிக் கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் இந்த நாடு முன்னேறாது.
1977 க்குப் பிறகு, சீனா திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டபோது, முதலீட்டாளர்கள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள்?
சீனாவில் முதலீடுகளை பாதுகாக்க சுதந்திரமான நீதி அமைப்பு இல்லாமல் நாங்கள் சீனாவுக்கு வர மாட்டோம் என்றார்கள்.
ஐந்து ஆண்டுகளாக, சீனாவில், குறிப்பாக வணிக விவகாரங்களில் நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்க தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அரசு தலையிட முடியாது.நம் நாடும் இப்போது முதலீடு பற்றி பேசுகிறது.
அப்போது நமது நீதித்துறை சுதந்திரமானது, காவல்துறை, அட்டர்னி ஜெனரல் நல்லவர்கள் என்று சர்வதேச சமூகம் உணர வேண்டும் எனத் தெரிவித்தார்.