நாடு எப்படி திவாலானது என்பதைக் கண்டறிய விசேட குழு நியமனம்
அரசாங்கம் அறிவித்துள்ள நிதி திவால்தன்மைக்கான காரணங்களை கண்டறிய பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிதி திவால்தன்மைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த பாராளுமன்ற சிறப்புக் குழு தனது முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பது பொறுப்பாகும்.
இதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக, மஹிந்தானந்த அலுத்கமகே,ஜயந்த கடகொட,மேஜர் பிரதீப் உந்துகொட, சஞ்சீவ எதிரிமான்ன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி நாலக பண்டார கோட்டேகொட, விஜித ஹேரத், இரான் விக்கிரமரத்ன, அசோக் அபேசிங்க, ஹர்ஷன ராஜகருணா, ஷானக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிதி வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் இந்த எம்.பி.க்கள் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.