மயக்க மருந்தின் காரணமாகவே நோயாளிகள் இறந்தார்களா? மக்கள் சந்தேகம்

#SriLanka #Death #doctor #Vaccine
Prathees
2 years ago
மயக்க மருந்தின் காரணமாகவே நோயாளிகள் இறந்தார்களா? மக்கள் சந்தேகம்

சத்திரசிகிச்சையின் போது கண் வைத்தியசாலையில் நோயுற்ற பெண் உயிரிழந்தமையும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமையும் மயக்க மருந்தினால் ஏற்பட்டதாக மக்கள் சந்தேகிக்கப்படுவதால் சுகாதார அமைச்சு பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளியிட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

 மருத்துவமனை அமைப்பில் சாதாரண மரணங்கள் கூட மருந்துகள் அல்லது தரக்குறைவான மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளின் சிக்கல்களால் ஏற்படுவதாக சமூகத்தில் கடுமையான சந்தேகம் நிலவுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த சந்தேகம் நியாயமாகி வருவதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

 பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்குள் வருவது, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் மருந்துகளை ஆய்வகப் பரிசோதனைகள் இன்றி வெளியிடுவது, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரம் குறைந்தவை என்பதை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டமை ஆகியன மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது என்றார்.

 தற்போதைய சுகாதார நிர்வாகத்திற்கு நோயுற்றவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ, வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த சுகாதார அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!