ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் குறித்த அறிக்கை வெளியீடு

#India #Death #Accident #Train
Prasu
2 years ago
ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் குறித்த அறிக்கை வெளியீடு

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பஹனாக பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கோரமண்டலின் சில பெட்டிகள் அவ்வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா ரெயில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தினார் இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான 40 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஜூன் 29ம் தேதி ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 அந்த அறிக்கையில், பல்வேறு நிலைகளில் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே விபத்திற்கான பிரதான காரணம் என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4