ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்

#Arrest #Australia #Murder #Women #Love
Prasu
2 years ago
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்

ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அனைவரையும், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த 21-வயது நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 650 கி.மீ. காரில் கொண்டு செல்லப்பட்டு, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் பகுதியில், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். 

இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன.

அடிலெய்டு நகரில் வசித்து வந்த ஜாஸ்மீன் கவுர், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங் என்பவரால் கொல்லப்பட்டிருக்கிறார். 

கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே தாரிக்ஜோத் சிங் தன்னை பின் தொடர்வதாக ஜாஸ்மீன், போலீசில் புகாரளித்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!