மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜென்ட் விளக்கமறியலில்

#SriLanka #Court Order #Prison
Prathees
2 years ago
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜென்ட் விளக்கமறியலில்

21 வயதுடைய மனநலம் குன்றிய இளைஞனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 ஊவபரணகம பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் கொஸ்லாந்த பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர்.

 கைது செய்யப்பட்ட இளைஞரும் ஊவபரணகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபர் அவரை ஏமாற்றி இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 சம்பவத்தின் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஊவபரணகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!