தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை
#SriLanka
#Home
#Lanka4
#fire
Kanimoli
2 years ago
நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் ஆலோசனைக்கமையவும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, தோட்ட நிர்வாகத்துடனும் தொடர்புகொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அவர்களுக்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தேவையான வசதிகளையும் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பெற்றுக் கொடுத்துள்ளார்.