உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!
எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில்உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி இன்று (ஜுலை 06) நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து பிற்போடுவதற்கான காரணத்தை நான் அறியவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்ததை அடுத்து, சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற சபை முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சட்டமூலம் குறித்த திருத்தம் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்ற குழு நிலை அமர்வில் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது திருத்த யோசனையில் சட்ட வரைபின் 28 பக்கங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாவது திருத்த யோசனையிலும் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.